Ticker

6/recent/ticker-posts

how to Apply Patta Online and Manual Change

பட்டா என்பது நம்முடைய நிலம், தோட்டம், வீடு போன்ற அசையா சொத்துகளின் ஆதாரம் ஆகும். அந்த பட்டாவானது எப்படி நம் பெயரில் வாங்க வேண்டும் எனவும்,எப்படி ஆன்லைன் இல் விண்ணப்பிப்பது என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்போம்!


 





முதலில் தேவையான ஆவணங்கள் மற்றும் எவை தேவை என்பதை பற்றி பார்போம். 


Patta யாரெல்லாம் பட்டா விண்ணபிக்கலாம்:

  • பட்டா மாறுதல் கோரி எந்தஒரு Citizen குடிமகனும் விண்ணபிக்கலாம். 

  • tamilnilam.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று உள்நுழைய வேண்டும். 

இதில் பதிவு செய்ய தேவையான விவரம் :

  • பெயர்
  • கைபேசி எண்
  • முகவரி 

பட்டா மாறுதல் வகைகள் : 

  • உட்பிரிவு உள்ள இனங்கள்(subdivision survey number)
  • உட்பிரிவு இல்லாத இனங்கள்(non subdivision survey number)

  1.  முழுபுலம் (பெயர் மாற்றம்) Name Change
  2. கூட்டு பட்டாவாக Joind Patta

பட்டா மாறுதல் செய்ய தேவையான ஆவணங்கள்: 

  1. கிரையபத்திரம்
  2. செட்டில்மெண்ட் பத்திரம்
  3. பாகபிரிவினை பத்திரம்
  4. தான பத்திரம்
  5. பரிவர்தனை பத்திரம்
  6. அக்குவிடுதலை பத்திரம்

தேவைப்படும் மற்ற ஆவணங்கள் : 

  1. ஆள் அறிச்சான்று
  2. குடியிருப்பு ஆவணம். 

இவ்வாறாக தேவையான விவரங்களை பதிவு செய்து அதற்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி பதிவு செய்தல் குறிபிட்ட நாளில் உங்களுக்கான பட்டாவை பெற்று கொள்ளலாம். 


ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத பட்டாவை எப்படி விண்ணப்பிப்பது?

  • தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத பட்டா Patta online இனங்களை தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். 
  • ஒரிஜினல் Original ஆவணங்கள் அனைத்தையும் நேரில் எடுத்து  சென்று அவர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுத்து உங்களுக்கான பட்டாவை பெற்று கொள்ளலாம். 
                          

மனைவாரி தோராய பட்டா :

  1. மனைவாரி தோராய பட்டா (Patta) என்பது அரசு ஏற்கனவே வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கிய பட்டா ஆகும். 
  2. இதற்கு உண்மைநகல் தாலுகா அலுவலங்களில் வாங்கி கொள்ளலாம். 





கருத்துரையிடுக

0 கருத்துகள்