Ticker

6/recent/ticker-posts

கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க!!

கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க தவறாமல் செய்ய வேண்டிய விஷயம் என்ன? மறந்தும் இதை செய்ய மறக்காதீர்கள்!


kandha sasti kavasam
www.kivibtl.in



  • கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் பொழுது எவ்வித துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். 
  • ஆனால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் முன்னர் சொல்ல வேண்டிய மந்திரம் உண்டு. 
  • அம்மந்திரத்தை ஜெபித்து பின் கந்த சஷ்டி கவசம் வாசிப்பது முறையான பலன்களைக் கொடுக்கும். 
  • அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
  • கந்த சஷ்டி கவசம் தீமைகளில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் கவசம் ஆகும். 
  • கந்த சஷ்டி கவசத்தை அடிக்கடி உச்சரிப்பவர்களுக்கு அந்த முருகனே நேரில் வந்து அவதாரம் புரிந்து காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
  • அத்தகைய சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை படிப்பதன் வாயிலாக கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக அனுபவிக்க வேண்டும்.


முருக கவச பாடல்:

            

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

    ஓதியே செபித்து உகந்துநீ றணிய

    அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்!!


  • மேற்கண்ட இந்த மந்திரத்தில் இருக்கும் பொருளானது 36 முறை கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்பது அல்ல! 
  • இதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் 36 முறை கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் பலன்களை கூறியுள்ளனர். 
  • ஆனால் உண்மையில் சண்முக கவசத்தில் ஆறு அட்சரங்கள் உண்டு. 
  • அச்சரம் என்றால் எழுத்து என்கிற பொருள் உண்டு
  • ‘ஓம் சரவணபவ’ என்கிற இந்த ஆறு அட்சரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை. 
  • இது போல 36 உரு கொண்ட அட்சரங்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளன. 
  • உங்களை சுற்றி இருக்கும் எதிரிகள் தொல்லைகளிலிருந்தும், தீராத நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை தரும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு
  • 65 முருகன் போர் புரிந்த திருப்போரூர் ஸ்தலத்திலும், மதுராந்தகம் அருகாமையில் அமைந்துள்ள பெரும்பேர் கண்டிகை என்கிற ஊரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானுடைய கோவிலிலும் 36 அக்ஷரங்கள் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த யந்திரம் உள்ளது. 
  • இந்த எந்திரத்திற்கு அபிஷேகம் செய்வதன் மூலம் தீரா பிணிகளும், கஷ்டங்களும் அகலும் என்பது நம்பிக்கை.
  • கிரக தோஷம் நீங்கவும், ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சொல்ல வேண்டிய இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு பின்னர், சஷ்டி கவசத்தை வாசிக்கும் பொழுது அதனுடைய முழு பலனும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
  •  36 தடவை கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை! 
  • இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கந்த சஷ்டி கவசம் பாடினால் பெறற்கரிய பேறு கிட்டும்.
  • ஒரு வீட்டில் காலை, மாலை இரு வேளையும் கந்த சஷ்டி கவசத்தை படிப்பதும் அல்லது அதனை ஒலியாக கேட்பதும் அந்த வீட்டில் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். 
  • எந்த அளவிற்கு அதிகமாக கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வருகிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களுக்கு பலன்களும் உண்டு.
  • முருகனுக்கு உகந்த திதியாக இருப்பது சஷ்டி ஆகும். சஷ்டி திதி அன்று இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வேண்டிய வரங்களைப் பெறுவதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது.
  • நீங்கள் நினைத்தது நடக்க, வேண்டியது பலிக்கவும் மேற்கூறிய இம்மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வாருங்கள், நல்லதே நடக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்