Ticker

6/recent/ticker-posts

திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்புகள்...!!!

 திருநெல்வேலி தமிழகத்தில் பழமையான நகரம். இது  பாண்டியரின்  இரண்டாவது   தலைநகரம். 

www.kivibtl.in


திருநெல்வேலி  இனிப்பு :

அல்வா , பலருக்கும்  விருப்பாமான இனிப்புவகைகளுள்  ஒன்று.

www.kivibtl.in


பெயர்க்காரணம் :

நகரைச்சுற்றி  நெல்  வயல்கள்  வேலி  போல்  அமைந்திருந்ததால்  திருநெல்வேலி  என  பெயர்  பெற்றது.  தற்போது  நெல்லை  என  மருவி  வழங்கப்படுகிறது.

www.kivibtl.in



திருநெல்வேலியின்  சிறப்பு :

திக்கெல்லாம்  புகழுறும்  திருநெல்வேலி  என  திருஞானசம்பந்தரும்  தன்பொருணை  புனல் நாடு என சேக்கிழாரும் கூறியுள்ளனர்.

மலை - பொதிகை மலை 

www.kivibtl.in


சுற்றுலா தளம் - திரிகூடமலை


திருநெல்வேலி பகுதியை  வளம்   செழிக்கச்செய்யும்  ஆறு  தாமிரபரணி  ஆறு.

www.kivibtl.in



கிளை  ஆறுகள் :

பச்சையாறு , மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி.


தொழில் :

உழவுத்தொழில் 

திருநெல்வேலி  குளத்துப்பாசனமும்  கிணற்றுப்பாசனமும்  பயன்பாட்டில்  உள்ள  நகரம்.

www.kivibtl.in



பயிர்கள் :

சிறுதானியங்கள் , எண்ணைய்வித்துக்கள் , காய்கனிகள் , பருத்தி, பயறு வகைகள் .

நெல்லிக்காய்  உற்பத்தியில்  முதலிடம் வகிக்கும்  மாவட்டம்  திருநெல்வேலி.

சிறப்பு தொழில் - மீன் பிடித்தல்.

அங்கு உள்ள துறைமுகத்தின் பெயர் கொற்கை. ( தாமிரபரணி  கடலோடு  கடக்கும்  இடத்தில்  கொற்கை  என்னும்  துறைமுகம்  இருந்தது.)

நகரின் நடுவே  நெல்லையப்பர்  திருக்கோவில்  அமைந்துள்ளது.

www.kivibtl.in


தெருக்களின் சிறப்பு :

திருநெல்வேலி  மாவட்டத்தில்  காவற்புரைத்தெரு  என்று  ஒரு தெரு உள்ளது. காவற்புரை  என்றால்  சிறைச்சாலை  என்று  பொருள்.

அரசரால்  தண்டிக்கப்பட்டவர்கள்  இங்குச்சிறை  வைக்கப்பட்டதால்  இப்பெயர்  பெற்றது.


இரண்டாவதாக  மேல  வீதியை  அடுத்துக் கூழைகடைத்தெரு  உள்ளது. கூலம்  என்றால்  தானியம்  என்று  பொருள்.

கூலக்கடைதெரு   என்பதே  மறுவிக்  கூழைக்கடைதேரு  என  வழங்கப்படுகிறது.


நகரின்  மேற்கே  பேட்டை  என்னும்  ஊர்  உள்ளது. வணிகம்  நடைபெறும்  பகுதியை  பேட்டை  என  அழைத்தனர்.


அகத்தியர்  வாழ்ந்த  இடம் - பொதிகை மலை.

www.kivibtl.in



திருநெல்வேலி  சீமையில்  பிறந்த  புலவர்கள் :

மாறோக்கத்து  நபசாலையார் 

நம்மாழ்வார் 

பெரியாழ்வார்

குமரகுருபரர்

திரிகூடராசப்பகவிராயர்

கவிராசப்பண்டிதர்.

www.kivibtl.in



ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர்  போன்ற  அயல்நாட்டு  அறிஞர்களை  தமிழின்பால்  ஈர்த்த  பெருமை  திருநெல்வேலி  மாவட்டத்தைச்சாறும்.



இந்த  பதிவு  உங்களுக்கு   புடுச்சுருந்த  like and share பண்ணுங்க. comment box ல next எந்த  மாவட்டம் பத்தி  தெருஞ்சுகனும் நு commend சொல்லுங்க.  எங்களோட  அடுத்த  பதிவு  உங்களுக்காக....

www.kivibtl.in


கருத்துரையிடுக

0 கருத்துகள்